மட்டக்களப்பு பாட்டாளிபுரம் சஸ்டேயன் விளையாட்டு கழகம் 2016 ஆம் ஆண்டுக்கான எவகிரீன் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது

(லியோன்)

மட்டக்களப்பு
  இருதயபுரம் எவகிரீன் விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட   லீக் முறையிலான மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் மட்டக்களப்பு  பாட்டாளிபுரம் சஸ்டேயன் விளையாட்டு கழகம்2016 ஆம்ஆண்டுக்கான  எவகிரீன் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது


மட்டக்களப்பு  இருதயபுரம்  எவகிரீன்   விளையாட்டு கழக ஏற்பாட்டில் கழகத்தின்  16வது  வருட நிறைவினை  சிறப்பிக்கும் வகையில்   பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட   பதிவு செய்யப்பட  விளையாட்டு கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்களுக்கு ஒன்பது பேர்  கொண்ட லீக் முறையிலான  மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகள்  நடத்தப்பட்டது .    

இந்த  கிரிகெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி  மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார்  மைதானத்தில்  02.10.2016  ஞாயிற்றுக்கிழமை மாலை  நடைபெற்றது  .

10 ஓவர்கள்  கொண்ட லீக் முறையில்  நடைபெற்ற  மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில்  கலந்துகொண்ட  32  விளையாட்டு  கழகங்களில் இறுதி போட்டிக்கு மட்டக்களப்பு  இருதயபுரம்  எவகிரீன்  விளையாட்டு கழகமும் மட்டக்களப்பு  பாட்டாளிபுரம் சஸ்டேயன் விளையாட்டு கழகமும் தெரிவானது . 

இறுதியாக இரு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற   நாணய சுழற்சியில் வெற்றி பெற்று  முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இருதயபுரம் எவகிரீன்  விளையாட்டு கழகம் 10 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 53  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய  பாட்டாளிபுரம் சஸ்டேயன் விளையாட்டு கழகம்  05   ஓவர்கள் முடிவில்   விக்கெட்டுக்களை  இழந்து  54   ஓட்டங்களை பெற்று  ஒரு ஓட்டத்தால்     மட்டக்களப்பு பாட்டாளிபுரம் சஸ்டேயன்  விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது .

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக மட்டத்தில்  பதிவு செய்யப்பட  கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட   லீக் முறையிலான மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் சஸ்டேயன்  விளையாட்டு கழகம்  ஜம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2016 ஆம் ஆண்டுக்கான  எவகிரீன் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு   பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் , விளையாட்டு ரசிகர்கள் என பலர்    கலந்துகொண்டனர்.