மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாளில் பெருமளவானோர் கண்டுகளிப்பு

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது.

இறுதி தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியினை கண்டுகளிப்பதற்காக பெருமளவான மக்கள் வந்து செல்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி நடைபெற்றுவருகின்றது.

இன்றைய கண்காட்சிக்கு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வருகைதந்து பார்வையிட்டார்.

இதன்போது மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அகிலன்,சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தகண்காட்சியில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை உட்படபல்வேறு துறைகளைச்சேர்ந்த120க்கும் மேற்பட்டஉள்நாட்டு,சர்வதேசதொழில்சார்நிறுவனங்கள் தமதுஉயர்தொழில்நுட்பங்களை இங்குகாட்சிப்படுத்தியுள்ளன.

மட்டக்களப்புமாவட்டத்தில் கிராமியமட்டத்தில் இருக்கும் பல்வேறுதுறைசார்ந்தஉற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தமதுதுறைசார்ந்தசிறந்ததொழில்நுட்பஅறிவினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்தகண்காட்சியில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.