
அந்த வகையில் இம்முறை நான்கவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு தொகுதி வாரியாக 225 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர் வரும் டிசம்பர் மாதம் 19ம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
02.12.2016 திகதி வேட்பு மனுத்தாக்கல் இறுதித் தினமாகவும், வேட்பாளர்கள் 16.12.2016 நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கான கால எல்லையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முதலாவது இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்டதுடன். மூன்றாவது மற்றும் நான்காவது இளைஞர்பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.