மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப நிறுவன மாணவன் அமெரிக்கா பயணம்

அமேரிக்காவில் வருடாவருடம் நடைபெறுகின்ற நீர் முகாமைத்துவம் மற்றும் புத்தாக்கம் ""WaterSmart Innovations 2016"" தொடர்பான மாநாட்டிற்கு மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் கல்வி கற்கும் மாணவன் கிஷோத் நவரெட்ணராஜா அவர்கள் 2016ம் ஆண்டிற்கான அமர்விற்கு வருகின்ற ஓக்டோபர் மாதம் அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

WaterSmart Innovations 2016 ற்கு இம் மாணவணால் சமர்பிக்கப்பட்ட செயற்றிட்டமானது தெரிவுசெய்யப்பட்டு அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு அமேரிக்க தெற்கு நெவேடா நீர் ஆணையத்தினால் வழங்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் தெரிவித்தார்.

மேலும் இம் மாணவன் நீர் மற்றும் சூழல் சம்மந்தப்பட்ட புத்தாக்கங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சென்ற 2015 ம் வருடம் இலங்கை புத்தாக்குநர் ஆனணகுழுவினால் நடாத்தப்பட்ட Sahasak Nimavum தேசிய புத்தாக்கப் போட்டியில் நீர் சம்மந்தமான அவரது புத்தாக்கம்  தேசிய ரீதியில் 2ம் இடத்தை பெற்றது.

மேலும், 2013ம் ஆண்டு மட்ஃசிவானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் போது நீர் முகாமைத்துவ புத்தாக்கப் போட்டியில் இலங்கையில் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப் பெற்று சுவீடனில் நடைபெற்ற
Stockholm Junior Water Prize 2013 செயற்றிடத்திற்கு இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.