மட்டக்களப்பு நகரில் ஏறாவூர்ப்பற்று பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள படுவான்கரை பகுதி மக்கள் தமது நீர்தட்டுப்பாடை நீக்ககோரி மட்டக்களப்பு நகரில் மாபெரும் அமைதியான முறையினலா ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

செங்கலடி –பதுளை வீதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய ஐந்நூறுக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் தமக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறும் கோரி ஆர்ப்பாட்;டத்தினை நடாத்தியதுடன் அமைதியான முறையிலான கவன ஈர்ப்பு பேரணியையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் நடாத்தினர்.

தாங்கள் 30வருடமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில் இதுவரையில் தங்களது துன்பத்தினை போக்க யாரும் முன்வரவில்லையெனவும் இங்கு மக்கள் குற்றஞ்சாட்டினர்.

தூங்கள் பல வழிகளிலும் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் இனியாரையும் நம்பி ஏமாறாமல் தமக்கான தேவையினை தாங்களே பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்துவதாகவும் அதில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

வுறட்சி காலத்தில் நிரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் ஐந்து ஆறு கிலோமீற்றருக்கு அப்பால் சென்றே நீரைப்பெற்றுக்கொள்ளும் நிலையேற்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கரடியனாறு தொடக்கம் மங்களகம வரையிலான பகுதி மக்கள் தொடர்ச்சியான நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் குளிப்பது என்றாலும் பஸ்களில் செங்கலடிக்கு வந்தே குளித்துவிட்டுச்செல்வதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யானைகளின் தொல்லையும் இருப்பதன் காரணமாக அதிகாலையில் இருந்து நீரைப்பெறும்போது உயிரைப்பணயம் வைக்கவேண்டிய நிலையும் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புhடசாலை செல்லும் மாணவர்கள் அதிகாலை ஒரு மணிக்கு குளிக்கச்செல்லும்போது காலை 7.30மணிக்கு பாடசாலைக்கு செல்லமுடியும் என தெரிவித்த பெற்றோர் பாடசாலைக்கு நேரம் பிந்திச்செல்லும்போது மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரை சந்தித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.