வெல்லாவெளி முக்கொலை – சான்று பொருட்களை இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்ப உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை பகுதியில் இடம்பெற்ற முக்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் கொலைசெய்யப்பட்ட இடத்தில் பெறப்பட்ட தடயப்பொருட்களையும் உடல் பாகங்களையும் இராசயணப்பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

24.07.2016 அன்று அதிகாலை ஒரு மணியளவில் பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசியிருந்ததுடன் விஜித்தாவின் தந்தையினையும் வெட்டிக்கொலைசெய்யததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் கைதுசெய்யப்பட்டு அதுதொடர்பான வழக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதமன்றில்நடைபெற்றுவருகின்றது.