மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் விபத்து

(லியோன்)

மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக கொழும்பு மற்றும்
பொலன்னறுவை நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மட்டக்களப்பு புகையிரத  நிலையத்திலிருந்து  இன்று காலை 6.15 மணிக்கு கொழும்பு  கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த ரயில்  புறப்படுவதற்கு தயாரான வேளையில்   தடம்புரண்டதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இஞ்சினுடன்  மோதியதன்  காரணமாக குறித்த இஞ்சின்  தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாகவும் இதன் காரணமாக   ரயில் பெட்டி ஒன்றும்    சேதமடைந்துளள்ளதாக . மட்டக்களப்பு பிரதான புகையிரத  நிலைய    அதிபர் எம்.பி. அப்துல் கபூர் தெரிவித்தார்.

இடம்பெற்ற ரயில் விபத்தில்  பயணிகள் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.

இந்த விபத்திணை தொடர்ந்து   காலை 6.15 மணிக்குப் புறப்படும் உதயதேவி ரயிலானது  விபத்துக்குள்ளான பெட்டியினை  குறைத்துக்கொண்டு  பயனிதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த விபத்தின்  காரணமாக  ரயில் பாதைகள் சீர்செய்யும் வரை பொலன்னறுவை நோக்கிச் செல்லும் ரயில் மற்றும்  பிரதான கொழும்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய  பிரதான அதிபர்   தெரிவித்தார்.