சிறைக்கைதிகளின் தினத்தை முன்னிட்டு சிரமதான பணிகளும், இலவச மருத்துவ முகாமும்

(லியோன்)

ஸ்ரீ லங்கா சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம்  மற்றும் ஸ்ரீ லங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கூட்டு முயற்சியில் சிறைக்கைதிகளின் தினத்தை  முன்னிட்டு  நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் விசேட நிகழ்வுகள்  இடம்பெற்று வருகின்றன.
இதற்கு அமைவாக  மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறப்பு  வாரமாக நடைமுறை படுத்தப்பட்டு சிறைச்சாலை   பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் விசேட  சமூக பணிகள் நடைபெறுகின்றன .

இதன் ஒரு நிகழ்வாக இன்று (10) சனிக்கிழமை காலை  சிரமதான பணிகளும்  “சிறைக்கதிகளும் மனிதர்களே  அவர்களுக்கு உதவியளிப்போம்” எனும் தொனிப்பொருளில் தொற்றாநோயிக்கான இலவச மருத்துவ முகாமும்  நடைபெற்றது .


இன்று நடைபெற்ற சிரமதான பணிகளிலும் , இலவச மருத்துவ முகாமிலும் மட்டக்களப்பு சிறைச்சாலை  பிரதம புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க , சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க தலைவர் என் பி . ரஞ்சன் , செயலாளர் . வி .பிரதீபன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான , பி .சுசிதரன் .  எல் . ஜெயசுதாகரன் .  பி. ஜி . டேவிட் , சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் சரிஸ்ட்னி,  தாதிய சகோதரி திருமதி எஸ் . உதயசந்திரன் , மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , தாதிய உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர் .