எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்விக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு

 (லியோன்)

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்ற அனுசரணையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .

இதன் போது சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் சமுர்த்தி பயனாளிகளின்  தெரிவு செய்யப்பட வரிய குடும்ப மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப்பரிசில் உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

இந்த உதவி தொகை வழங்கும் நிகழ்வில் ஒரு மாணவனுக்கு 1000 ரூபா வீதம் 10 மாணவர்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டது .

இதனை தொடர்ந்து பாடசாலைகளில் இருந்து  இடைவிலகிய மாணவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டு அவர்களின் கல்விக்காக ஒரு மாணவனுக்கு 2500 ரூபா வீதம் உதவி தொகையும் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி . கே . நிர்மளா மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .விஜெகுமார், வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளர்கள் , மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்