மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 143வது கல்லூரி தினம்

இலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 143வது கல்லூரி தினம் இன்று வியாழக்கிழமை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹீர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது விசேட பூஜையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் கல்லூரியின் ஸ்தாபகர் பேர்டிணன்ட் போணலின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.