பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் அழகிய புதிய ஆலய திறப்பு விழாவும் கொடியேற்றமும்

மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் புதிய ஆலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழா கொடியேற்றமும் இன்று (5) வெள்ளிக்கிழமை மாலை மட்டு.அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளது.
கொடியேற்றத்திற்கு ஆயத்தமாக இன்று (05) மாலை 4.45 மணிக்கு செபமாலை பிரார்த்தனையுடன், பார் வீதி சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்திலிருந்து திருச்சொருபம் பவனியாக எடுத்துவரப்பட்டு புதிய ஆலய திறப்பு விழாவுடன், ஆலய கொடியேற்றமும் இடம்பெறவுள்ளது.

தினமும் நவநாள் ஆராதனையுடன் திருப்பலியும் இடம்பெற்று,   13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு அன்னையின் திருச் சுரூப பவனி இடம்பெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி காலை திருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், திருப்பலி வேளையில் பிள்ளைகளுக்கான முதல் நன்மை, உறுதிப்பூசுதல் என்பன ஆயரினால் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.