பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா

(லியோன்)


திராய்மடு - பனிச்சையடி  அனைத்துலக   நாடுகளின்   அன்னை   ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு  திராய்மடு பனிச்சையடி  அனைத்துலக   நாடுகளின்   அன்னை   ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (28) ஞாயிற்றுக்கிழமை காலை   கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவில் நேற்று மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து  நற்கருணை ஆராதனையும்  நடைபெற்றது.

ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று விசேட திருப்பலியுடன்  நற்கருணை  ,உறுதிப்பூசுதல்  ஆகிய  அருள் அடையாளங்கள்  பங்கு மாணவர்களுக்கு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழங்கப்பட்டது

தொடர்ந்து ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலியை  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குத்தந்தை   அருட்பணி.  ஜேசுதாசன் ,அருட்பணி .நோட்டன் ஆகியோர்  இணைந்து ஒப்புகொடுத்தனர்

ஆலய  திருவிழா  திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் தொடர்ந்து  கொடியிறக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றதுடன் அன்னையின் திருச்சொரூப ஆசிர்வாதமும் இடம்பெற்றது .

இந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்


ஆலயத்தின்  10வது வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சன்பிளவர் விளையாட்டுக் கழகத்தினால் மாபெரும் விளையாட்டு போட்டி நிகழ்வுகளும் நடத்தப்பட்டது .