2016 - தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 350701 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.


(லியோன்)

 2016 ஆம் ஆண்டுக்கான   தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை   இன்று   நாடளாவிய ரீதியில்  நடைபெற்றது .


இன்று நடைபெற்ற    தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 350701    மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

இதில் தமிழ் மொழி மூலம் 89847  மாணவர்கள்  தோற்றியுள்ளனர்.

இந்த பரீட்சைக்காக  நாடலாவியல் ரீதியில் 2954  பரீட்சை மத்திய நிலையங்களும் 494  இணைப்பு நிலையங்களும்  அமைக்கப்பட்டுள்ளன .

2016 ஆம் ஆண்டுக்கான   தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில்   05  வலயத்திலும்  11355  மாணாவர்கள் தோற்றிவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு , மட்டக்களப்பு மத்தி ,கல்குடா ,பட்டிருப்பு ,மண்முனை மேற்கு  ஆகிய  05 வலயத்தில்   97  பரீட்சை நிலையங்களிலும்   13 இணைப்பு பரீட்சை நிலையங்களிலும்  இப் பரீட்சைகள்  நடைபெற்றமை   குறிப்பிடத்தக்கது.