சகாயபுரம் சதாசகாய அன்னையின் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது ( PHOTOS & VIDEO )

 (லியோன்)

மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் சதாசகாய அன்னையின்  ஆலய வருடாந்த திருவிழா  கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது  .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மாமாங்கம் சகாயபுரம் சதாசகாய அன்னை  ஆலய வருடாந்த திருவிழா  கடந்த 12.08.2016 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி பேதுரு ஜீவராஜ்  தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு அருளுரைகளுடன் திருப்பலி இடம்பெற்றது.

ஆலய திருவிழா திருப்பலி இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை  தலைமையில் பங்கு தந்தை அருட்பணி பேதுரு ஜீவராஜ் ,அருட்பணி இன்னாசி ஜோசப் , அருட்பணி மொறாயஸ் , அருட்பணி  ஜெரோம் டிலிமா  ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .

20.08.2016 சனிக்கிழமை  மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திருப்பலியும்  ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளுடன் தொடர்ந்து   அன்னையின்  திரு உருவம் பவனி .நடைபெற்றது .

ஆலய திருவிழா   திருப்பலி இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட  திருநாள்  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு  தொடர்ந்து ஆலய முன்றலில் நடைபெற்ற அன்னையின் திருச்சுருப ஆசிர்வாதத்துடன்   ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது .