மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி

(லியோன்)

மட்டக்களப்பு  வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலி இன்று
ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ .தேவதாசன்  தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது
. ஆலய திருவிழா கடந்த  வெள்ளிக்கிழமை மாலை  கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன் தொடர்ந்து  நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருசெபமாலை, திருப்பலியும் இடம்பெற்றது.

30.07.2016  சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து    அன்னையின் திரு உருவம் பவணி  வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

இன்று (31)  ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட  குருமுதல்வர் எ .தேவதாசன் தலைமையில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் பங்குதந்தை  எக்ஸ் ஐ ..ரஜீவன். அருட்பணி ஜேசுதாசன் ,அருட்பணி லெஸ்லி ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .

திருவிழா  திருப்பலியை தொடர்ந்து  ஆலய முன்றலில் இடம்பெற்ற  விசேட ஜெப வழிபாடுகளுடன் ஆலய திருவிழா   திருநாள்  கொடி இறக்கப்பட்டு வருடாந்த திருவிழா இனிதாக நிறைவுபெற்றது .  

இன்று இடம்பெற்ற  வீச்சுக்கல்முனை  புனித  அன்னம்மாள்   ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்  .