இலங்கை வங்கியின் 77 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் இரத்ததான முகாம்


(லியோன்)

இலங்கை வங்கியின்
77 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் இரத்ததான முகாம்  இன்று மட்டக்களப்பு  நடைபெற்றது.


“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை வங்கியின் 77 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலும்  வருடாந்தம் பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இலங்கை வங்கி மட்டக்களப்பு மேற்தரக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட    இரத்ததான முகாம்  இன்று (31) மட்டக்களப்பு வங்கி அலுவலகத்தில்  நடைபெற்றது .

மட்டக்களப்பு இலங்கை வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் .எம் .ஐ நௌபீல்   தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் இலங்கை வங்கியின் தலைமைக்காரியாலய உதவி பொது   முகாமையாளர் .டபிள்யு .எ .சி .திசேரா, மற்றும் அனுராதபுரம் , பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்த   இலங்கை வங்கியின் முகாமையாளர்களும், வங்கி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் அனுராதபுரம் , பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்த   இலங்கை வங்கி கிளைகளுடன்  இணைந்து இயங்கி வரும் அனுராதபுரம் , பொலன்னறுவை    மாவட்டத்தின்  பக்கமுன மற்றும்  திறப்பனே ஆகிய   கிராம மகளிர்  அபிவிருத்தி சங்கங்களின்  குழு அங்கத்தவர்களும் ,மட்டக்களப்பு  இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் க.விவேக் மற்றும் தாதியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.