மட்டு - ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ,மாணவர்களுக்கான கௌரவிப்பும்

(லியோன்)

மட்டக்களப்பு   ஐயங்கேணி தமிழ்  வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று   நடைபெற்றது
.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  ஐயங்கேணி தமிழ்  வித்தியாலயத்தில் கிழக்குமாகான சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள  இரண்டு மாடி  வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  பாடசாலை அதிபர் எம் .மனோகரன்  தலைமையில் இன்று (22) வெள்ளிகிழமை நடைபெற்றது .

கிழக்குமாகான சபையால் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த இரண்டு மாடி கட்டிடம்  நிர்மாணிக்கப்படவுள்ளது .

இன்று நடைபெற்ற   அடிக்கல் நாட்டும் நிகழ்வுடன்  மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டி  விழா நிகழ்வில்  கலந்துகொண்ட இப்பாடசாலை மாணவர்களில் 19 வயதுகுற்பட்ட ஆண்கள் பிரிவில் சதுரங்க போட்டியில் இரண்டாம் இடத்தினையும் , 15  மற்றும் 19 வயதுக்குற்பட்ட  ஆண் ,பெண் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற மேசை பந்து போட்டியில் முதல் இடத்தினையும் , 15 மற்றும்  19 வயதுக்குற்பட்ட பெண்கள் பிரிவில் சதுரங்க போட்டியில் முதல் இடத்தினையும்   பெற்று கிழக்குமாகாணத்தில் ஏறாவூர் பற்று – 01  கல்விக்கோட்டத்தின் ஐயங்கேணி தமிழ்  வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கப்பட்டு வெற்றி கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் விருந்தினர்களாக  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாலேந்திரன் , கிழக்குமாகான சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா .துறைரெட்ணம் , மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர் .