கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்புபோராட்டம்

கிழக்கு பல்பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்பல்கலைக்கழகம் மற்றும் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் கடமையாற்றும் கல்விசார ஊழியர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமக்கு வழங்கப்படும் மாதாந்த இடர்கொடுப்பனவினை அதிகரித்து அதனை ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியற்றுடன் இணைக்கவேண்டும்,ஓய்வூதிய திட்டத்தினை மீளாய்வு செய்யவேண்டும்,மருத்துவகாப்புறுதி வழங்கவேண்டும்,ஓய்வூதிய வயதெல்லையை 57இல் இருந்து 60ஆக உயர்த்தவேண்டும்,2016 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில்முன்மொழியப்பட்ட விடயங்களை அமுல்படுத்தவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தியே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்கள் கலந்துகொண்டதுடன் ஆர்ப்பாட்டத்தின்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “பல்கலைக்கழக ஊழியர்களுக்கான காப்புறுதி திட்டம் எங்கே?, ஓய்வுபெறும் வயதெல்லை சுற்றறிக்கையினை உடனடியாக அமுல்படுத்து,பல்கலைக்கழக ஒய்வூதியத்தை மறுபரிசீலனை செய் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.