ஊடகம், ஊடகவியலாளருக்கான நெறி முறைசார் தொடர்பான கருத்தரங்கு

(லியோன்)

ஊடகவியலாளருக்கான நெறி முறைசார்  தொடர்பான   இரண்டு நாள் கருத்தரங்கு  
 மட்டக்களப்பு கல்லடியில்  இடம்பெற்றது .


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி  உதவிவுடன் சட்டத்தரணிகள் சங்கம் .ஹெக்டெட் , சொண்டு  ஆகிய  அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில்  ஊடகம், ஊடகவியலாளருக்கான நெறி முறைசார்       தொடர்பான இரண்டு நாள்  கருத்தரங்கு   23ஆம் ,24ஆம் திகதிகளில் மட்டக்களப்பு
கல்லடி பிரிச் வியு விடுதி கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது .

இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின்   அடிப்படை உரிமைகள்,  ஊடக நெறிமுறைகள், முரண்பாட்டிலிருந்து மீளும் நிலையில் ஊடகங்களின் பொறுப்பு, சட்டம் ஒழுக்க  விதிகள்  மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படன. 

இரண்டு நாள் இடம்பெற்ற செயலமர்வில் வளவாலர்களாக சட்டத்தரணி எப் .எக்ஸ் . விஜயகுமார் . சட்டத்தரணி திருமதி . எஸ் .மிருதினி ,மனித உரிமை வளவாளர் கே .கிரிஸ் குமார் . ஊடகவியலாளர் தேவ அதிரன் மற்றும் ஹெக்டெட் நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி லாவண்ணியா கிறிஸ்ரி , சொண்ட் நிறுவன  பணிப்பாளர்  எஸ் செந்தூராஜா, சொண்ட் நிறுவன  நிகழ்ச்சி  திட்ட  உத்தியோகத்தர் எஸ் . சிவநடராஜா , சட்டத்தரணிகள் சங்க திட்ட உத்தியோகத்தர்   , திருமதி . கமலிடா சசிரூபன்  மட்டக்களப்பு மாவட்ட  ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.


இரண்டு நாள் நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்ட ஊடகவியளாலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது