ஸ்ரீ ராமகிருஷ்ணன் மிஷன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான அறநெறி ஊக்குவிப்பு வேலைத்திட்டம் (VIDEO & PHOTOS)

 (லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும்  இணைந்து நடாத்தும்   பாடசாலை மாணவர்களுக்கான அறநெறி ஊக்குவிப்பு வேலைத்திட்டம்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன ,.

 இதன் கீழ் இன்று கல்லடி உப்போடை விபுலானந்தபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணன் மிஷன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான அறநெறி தொடர்பாக நிகழ்ச்சி  கல்லடி உப்போடை மணிமண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது  .

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் அறநெறி என்பது எமது வாழ்க்கையுடனான ஒவ்வொரு செயல் பாட்டிலும் இணைந்துள்ளது

ஆனால் துரதிஷ்ட வசமாக சில வேளையிலே அறநெறி தொடர்பாக விடயங்களை பெறுகின்ற வேளையிலே பல்வேறு சமூக பிரச்சினைகள் ஏற்படுகின்றது .

இவ்வாறான செயல்பாடுகள்  நடைபெறுவதற்கு  காரணம் நாங்கள் அறநெறியிலே  இல்லாமல் அதனை மறந்து செயல்படுவது  தான் என மாணவர்களுக்கு சுட்டிக்காட்டினார் .

எந்தவொரு மதமும் கூறுவது அறநெறியை தான் , ஆனால்  மதம் அறத்தை கூறுகின்ற போது அறத்தை விட  மதத்தை மதிப்பதன் காரணமாக தான்  இந்த அறநெறி எங்களுக்குள் சிலவேளைகளில் கேள்விக்குறியாக  மாறுகின்றது . 

நாங்கள் மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதற்கேற்ப அறத்துக்கும் அறத்தின் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது .

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அறநெறியினை கற்பிக்க வேண்டும் அதனூடாக நல்ல அறநெறிகளை கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும் என தெரிவித்துக்கொண்டார் .


இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ண  மிஷன் வணக்கத்துக்குரிய  ஸ்ரீமத்சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கான அறநெறி தொடர்பான சமய   விரிவுரைகளை வழங்கினார்   


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி . சாலினி மதனகுமார் , எ .எல் . முசாதிக்,  அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.