(லியோன்)
இலங்கையில் மதுபாவனையில் முதல் இடத்தினைப்பெற்ற மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பல விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது
இந்த பேரணியானது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற கட்டிட தொகுதியில் இருந்து பிரதான வீதியின் நீதிவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலம் வரை சென்று பேரணி நிறைவுற்றது .
இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் எமது வீட்டில் புகைபிடித்தல் மதுபாவனை புரிய மாட்டோம் ,போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்போம் ,,போதையிலிருந்து விடுதலை பெறுவோம் ,ஆரோக்கியமாக வாழ்வோம் , போதைப் பாவனை வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் .பி.மொயிதீன் இங்கு
கருத்து தெரிவிக்கையில் தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அரசாங்கமும் நாட்டு
ஜனாதிபதியும் இந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் பாவனையையும் போதை பொருட்களையும் முற்றாக
அழித்தொழிப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அனைவருக்கும் தெரியும் ஒருவர் போதை பொருளுக்கு அடிமையாக உள்ளக்கப்பட்டிருந்தால்
அவருடைய நிலை என்னாகும் , அவருடைய குடும்பத்தாரின் நிலை என்னாகும், பாடசாலை
செல்லும் அவருடைய பிள்ளைகளின் நிலை என்னாகும் என்பதை பற்றி அனைவரும் அறிந்த விடயம் .
அநேகமான குடும்பங்கள் இன்றைக்கு இலங்கை நாட்டிலே சீரழிந்து சிதைவுண்டு
போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த போதைபொருள் பாவனைகள் ஆகும் .
ஒரு குடும்ப தலைவன் [போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் குடும்பத்தில்
உள்ள ஏனைய நபர்களும் அதன் விளைவாக பாதிக்கப்பட்டு சமுதாய சீரழிவுகளுக்கு
உள்ளாக்கப்பட் வேண்டியவர்களாக
இருக்கின்றார்கள் .
இந்த போதை பொருளினால் விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு
போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் சமுதாயத்திலே மிகவும் பெருகிவருகின்றது .
இதனால் நீதவான் நீதிமன்றங்களில் மாத்திரம் அல்ல மாவட்ட
நீதிமன்றங்களிலும் வழக்குகள் பெருகிவருகின்றன .
இதனால் இவ்வாறான குற்றங்களில் இருந்தும் நம்நாட்டு பிரஜைகளை
பாதுகாப்பதற்காக இந்த போதை பொருள் ஒழிப்பு என்பதை நாங்கள் முற்றாக மேற்கொள்ள
வேண்டும் .
இவ்வாறு இந்த போதை [பொருளுக்கு உள்ளக்கப்பட்டவர்களுக்கு புனருத்தாபன
வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு
விழிப்புணர்வான கருத்தரங்குகள், இவர்களுக்கு விளிப்பூட்டக்கூடிய நிகழ்வுகள் போன்றவற்றையும் நடைமுறையில் உள்ள
அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் .
அப்போது தான் அரசாங்கத்தின் இந்த திட்டம் வெற்றி அளிக்கும் என்பதில்
எவ்விதமான சந்தேகமும் இல்லை .
இன்று மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில் சமுதாயங்கள் சீர்திருத்த பிரிவு மூலமாக மட்டக்களப்பு நகரில் இருந்து போதை பொருளையும்
,போதை பொருள் பாவனையும் முற்றாக ஒழிப்போம் என திடசந்தர்ப்பத்தோடு இந்த நிகழ்வை
நடாத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் .
இதில் கலந்து கொண்டிருக்கின்ற புனருஸ்தாபன போதை பொருளுக்கு அடிமையாகி
புனருஸ்தாபனதிற்குட்பட்ட நபர்கள் தங்களை தாங்களே திருத்திக்கொள்ள வேண்டும் .
தொடர்ந்தும் இவ்வாறான போதைக்கு அடிமையாக்க கூடாது எனவே இந்த
சந்தர்ப்பத்தில் கூறுவது இந்த போதை பொருள் பாவனையில் இருந்து முற்றாக விலகுமாறும் இதனை
தாங்கள்ளே உறுதி செய்துகொள்ள வேண்டும் அப்போதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி
கிடைக்கும் எனவும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த மட்டக்களப்பு
நீதிவான் நீதிமன்ற சமுதாயங்கள்
சீர்திருத்த பிராந்திய காரியால உத்தியோகத்தர்களுக்கும் நீதிவான் நீதிமன்ற
நீதிபதிக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொண்டார் .
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
கணேசராஜா இந்த நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் எங்களுடைய பகுதிகளில் சமுதாயங்கள்
சீர்திருத்த பிரிவு மூலமாக பல நபர்கள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் .
மேலும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு இருக்கின்றன
. எங்களுடைய பல வழக்குகளிலே பலர் புனர்வாழ்வு பெற்று சென்றுள்ளதை கானக்கூடியதா
உள்ளது .
இப்பொழுது இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடித்துகொண்டிருக்கும் இந்த
வேளையில் அல்குரானும் இந்த போதை வஸ்து பாவனையை கடுமையாக கண்டித்து அதற்குரிய
தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன .
இவ்வாறன காலத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்துவதனாலும் ,
புனர்வாழ்வு அழிப்பதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதன் மூலமும்
அரசாங்கத்தின் திட்டத்தை மேலும் முன்னெடுப்பதற்கும் இவ்வாறான விழிப்புணர்வு
நிகழ்வுகள் நன்மை பயக்கும் என தெரிவித்து இந்நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த
பிராந்திய காரியால உத்தியோகத்தர்களுக்கும் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்
.பி . மொயிதீன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் .
இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணியில் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி எம்
.பி . மொயிதீன் ,நீதவான்
நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு சமுதாய சீர்திருத்த காரியாலய உத்தியோகத்தர் கே .
சுதர்சன் , சமுதாய சீர்திருத்த வேலைப்
பரிசோதனையாளர்கலான எஸ் . ஜரோனிக்க . கே .
ரஜனிகாந்த் , சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் த . மேகரமணன்
மற்றும் சமுதாய சீர்திருத்த கட்டளைக்கு உற்பட்ட தவராளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் ,