மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி(VIDEO & PHOTOS)

லியோன்)

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான  தேவைப்பாட்டின் மீதான பயிற்சி எனும் தொனிப்பொருளில் சுயதொழில் பயிற்சி நெறி இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக
த்தில்  இடம்பெற்றது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள அனுசரணையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில்  சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்  இடம்பெற்றது .

இந்த பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் எஸ் . வினோத் வளவாளராகவும் , மண்முனை வடக்கு பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . யமுனா புவனேந்திரன் , மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . கே . தெய்வேந்திரகுமாரி மற்றும்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர் .