முச்சக்கர வண்டிகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் மாகாணசபையினால் ஆரம்பிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல முச்சக்கர வண்டிகளையும் மாகாண சபையில் பதிவு செய்து பத்திரம் வழங்கும் நிகழ்வு முதன்முறையாக மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் புதன்கிழமை (ஜுன் 22, 2016) அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் புதிய நடைமுறையின் மூலம் முச்சக்கரவண்டிக்காரர்கள் பல்வேறு அனுகூலங்களை அடைந்து கொள்ள முடியும் என முதலமைச்சர் அங்குரார்ப்பண நிகழ்வின்போது தெரிவித்தார்.

சம்பிரதாய ஆரம்பிப்பு நிகழ்வாக ஓட்டமாவடிப் பிரதேசத்தில் சேவையிலீடுபடும் 10 முச்சக்கர வண்டிகள் மாகாண முச்சக்கரவண்டிப் பதிவுப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இதன் மூலம், அலுவலகங்களில், பொலிஸ் நிலையங்களில், மற்றும் இன்னோரன்ன திணைக்களங்களில் நம்பகத்தன்மையை  பேணிக் கொள்வதோடு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியாக இருப்பதால் முச்சக்கரவண்டிப் பயணிகள் மத்தியிலும் இன்னும் அதிக நம்பகத்தன்மை ஏற்படும் என்ற காரணத்திற்காக இந்த நடைமுறையை முதன் முறையாக கிழக்கு மாகாண சபை ஆரம்பித்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.