மாமாங்கம் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார சடங்கு உற்சவத்தின் வீரகம்பம் வெட்டும் வைபவம்(VIDEO & PHOTOS)


(லியோன்)
மட்டக்களப்பு  மாமாங்கம்   ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன்  ஆலய வருடாந்த அலங்கார  சடங்கு உற்சவத்தின் வீரகம்பம் வெட்டும் வைபவம்  18.06.2016 மாலை இடம்பெற்றது
.மட்டக்களப்பு  நகரில் சிறப்பு மிக்க அம்மன்  ஆலயங்களில் ஒன்றாக விளங்கும்  மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன்  ஆலய வருடாந்த அலங்கார  சடங்கு உற்சவத்தின் வீரகம்பம் வெட்டும் வைபவம் 18.06.2016 மாலை இடம்பெற்றது

உற்சவம் கடந்த 15 ஆம் திகதி  புதன்கிழமை மாலை திருக்கதவு  திறத்தல் உற்சவத்துடன்   பெருவிழா ஆரம்பமாகி  வீரகம்பம் வெட்டும் வைபவம் ஆலய பிரதம பூசகர்  சு . சுமனபால   தலைமையில் இன்று மாலை இடம்பெற்றது .

ஆலய உற்சவத்தின் தீமிதிப்பு வைபவம் 19.06.2016  ஞாயிற்றுக்கிழமை நாளை மாலை  நான்கு மணிக்கு    இடம்பெறும்
ஆலய வருடாந்த உற்சவத்தின்  உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் இரவு  அபிஷேக அலங்கார பூசைகளும்   ஆலய பிரதம பூசகர்  சு . சுமனபால   தலைமையில் இடம்பெற்று  20.06.2016 திங்கள்கிழமை அதிகாலை வேள்வியுடன் தொடர்ந்து திருக்கும்பம் சொரிதலுடன்   மாமாங்கம் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன்  ஆலய வருடாந்த உற்சவம்  நிறைவுபெறும் .