ஊடகவியலாளர் பெரடி கமகேயின் தாக்குதலை கண்டித்தும் இன்று மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது (VIDEO & PHOTOS)

 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கையெழுத்துப் போராட்டம்
17.06.2016 இன்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டது .

அண்மையில் தாக்குதலுக்குள்ளான  ஊடகவியலாளர் பெரடி கமகேயின் தாக்குதலை   கண்டித்தும் , ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம்   17.06.2016 இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது 

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை அச்சம் இன்றி மேற்கொள்ளும் நிலையினை ஏற்படுத்தவேண்டும் என வலியுறுத்தி இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இந்த நிலையில் அண்மையில்  நீர்கொழும்பு மாநகர சபைக்குள் வைத்து ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டமை  தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கான பின்னணியில் உள்ளவரை கைதுசெய்யவதற்கான நடவடிக்கையினை பாதுகாப்பு தரப்பினர் இதுவரை மேற்கொள்ளவில்லையெனவும்     குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கோரியும் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் காந்தி பூங்கா அருகில்  
கையெழுத்து போராட்டத்தை   மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டது

இந்த போராட்டத்தித்தில்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரதிநிதிகள் ,
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , ஊடக அமைப்புகள் , பொதுமக்கள் என  பலர் கலந்துகொண்டு தமது கண்டனத்தையும் தெரிவித்ததோடு , தமது கையெழுத்துக்களையும் வைத்தனர் .

தாக்குதலுக்குள்ளான  ஊடகவியலாளர் பெரடி கமகேயின் தாக்குதலை கண்டித்தும் இன்று சேகரிக்கப்பட்ட கையெழுத்து மஜர்கள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .