புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் சூழல் படையணியினருக்கு சின்னம் சூட்டும் வைபவம் ( VIDEO & PHOTOS )

(லியோன்)

உலக சுற்றாடல் தினமாக ஜூன் மாதம் 05ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் ஜூன் 05ஆம் திகதி உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது .

 இதன் கீழ்  மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் சூழல் படையணியினருக்கு  உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சின்னம் சூட்டும் வைபவம் கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில்  06.06.2016 மாலை இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் கல்லூரி சூழல் படையணி மாணவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.    


கல்லூரி சூழல் படையணி மாணவர்களுக்கும் சின்னம் சூட்டி கௌரவிக்கும்   நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா , ஸ்ரீநேசன் , விசேட அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஐ .விமல்ராஜ் , சுற்றாடல் படையணியின் வலய ஆணையாளரும் , விஞ்ஞானப் பாட உதவி கல்விப் பணிப்பாளருமான டி .ஞானசேகரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக சுற்றாடல் அதிகாரி திருமதி ஆர் .பாஸ்கரன் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்  பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .