ஊடகவியலாளருக்கான உரிமைகள் ,ஊடக சுதந்திரம் , தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 (லியோன்)

ஊடகம் , ஊடகவியலாளருக்கான உரிமைகள் ,ஊடக  சுதந்திரம் , தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான  இரண்டு நாள் கருத்தரங்கு ஜூன் மாதம் 04ஆம் ,05ஆம் திகதிகளில்  மட்டக்களப்பு தன்னாமுனையில்  இடம்பெற்றது .

 ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி  உதவிவுடன் சட்டத்தரணிகள் சங்கம் .ஹெக்டெட் , சொண்டு  ஆகிய  அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களின்  அடிப்படை உரிமைகள் மற்றும்   ஊடகம் , ஊடகவியலாளருக்கான உரிமைகள் , ஊடக சுதந்திரம் , தொடர்பான இரண்டு நாள்  கருத்தரங்கு ஜூன் மாதம்  04ஆம் ,05ஆம் திகதிகளில் மட்டக்களப்பு தன்னாமுனை மியாணி நகர் மண்டபத்தில் இடம்பெற்றது .

இடம்பெற்ற   செயலமர்வானது தற்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஊடவியலாளர்கள் ,வளர்ந்து வருகின்ற ஊடகவியலாளர்கள் சிறந்த முறையிலே செயல்பட்டு வருவதற்கும், அத்தோடு அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக  ஒரு திட்டமாக இந்த இரண்டு நாள் செயலமர்வுகள்   இடம்பெற்றது ,

இந்த பயிற்சி செயலமர்வின் போது கடந்த  கால பகுதியில் பெற்றுக்கொள்ள முடியாத  சட்ட ரீதியான ஊடக பயிற்சிகளும் , ஊடக அறம், ஊடக தணிக்கைகள் , தகவல் அறியும் உரிமைகள் , அதற்கான அறிவு சார்ந்த ஆராச்சிகள் , தகவல் தேடல்கள் மற்றும் சர்வதேச நியமங்கள் , சட்டங்கள் , எங்களுடைய நாட்டு சட்டதிட்டங்ககள் , சமூக விழிமியங்கள்  போன்ற  பல்வேறு பட்ட ஊடக சட்ட  செயல்பாடுகள் தொடர்பான விரிவுரைகளும் , பயிற்சிகளும்  வழங்கப்பட்டது

இந்த  செயலமர்வில் வளவாலர்களாக  மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதேச முகாமையாளர் கே . ஸ்ரீகுமார் , கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்  திருமதி . மோசேஸ் .  ஊடக துறை விரிவுரையாளர்   மோசேஸ் ,  மற்றும் ஹெக்டெட் நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி சி .லாவண்ணியா , சொண்டு நிறுவன  நிகழ்ச்சி  திட்ட இணைப்பாளர் திருமதி . பிரிய ரஜனி , சட்டத்தரணிகள் சங்க திட்ட உத்தியோகத்தர்   , திருமதி . கமலிடாமற்றும்  , கிழக்கு மாகாண தமிழ் , முஸ்லிம் , சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .