மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்

இலங்கையில் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் இலங்கையில் மிகவும் பழமையான தேவாலயமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாகவும் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை இக்னேசியஸ் அடிகளாரின் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்று எட்டு பங்குகள் கலந்துகொண்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெறவுள்ளதுடன் மறுதினம் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளது.

இந்த திருவிழா கூட்டுத்திருப்பலியை மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை நடாத்தவுள்ளார்.
திருவிழா கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறவுள்ளது.

திருவிழா காலங்களில் தினமும் செபமாலை வழிபாடுகள் ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகளும் நடைபெறவுள்ளன.