மகாஜன கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டி சுற்றாடலை பாதுகாக்கும் முகமாக விழிப்புணர்வு கண்காட்சியும் பொருட்கள் விற்பனையும் (VIDEO & PHOTOS)

(லியோன்)

இலங்கையின் இருந்து முற்றாக  பொலித்தின் பாவனையினை முற்றாக ஒழிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்தினுடன்  சுற்றாடலை பாதுகாக்கும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 இதன் கீழ்  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களினால் இயற்கை சூழலையும் ,எதிர்கால சந்ததிகளையும் பாதுகாக்க முகமாக  உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவர்களின்  ஏற்பாட்டி பொலித்தின் பாவனையினை முற்றாக ஒழித்து  சுற்றாடலை பாதுகாக்கும் முகமாக விழிப்புணர்வு  கண்காட்சியும் பொருட்கள்  விற்பனையும்    
கல்லூரி அதிபர்  திருமதி என். துரைராஜசிங்கம் . தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் 17.06.2016 இடம்பெற்றது

மாணவர்களினால் சுற்றாடலை பாதுகாக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியும் பொருட்கள் விற்பனையும் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயக் பிரதி  கல்விப்பணிப்பாளர் பி .வன்னியசிங்கம் , மட்டக்களப்பு கல்வி வலய விஞ்ஞானம் உதவி கல்விப் பணிப்பாளர்  டி .ஞானசேகரம் ,மாவட்ட செயலக  பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர்  திருமதி ரஜனி பாஸ்கரன் , கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்.