“நீதிக்கான மாற்றத்திற்காகப் பரிந்துரைப்போம்” என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வு

“நீதிக்கான மாற்றத்திற்காகப் பரிந்துரைப்போம்” என்ற தொனிப்பொருளில் சிவில் சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமைஇடம்பெற்றது.
உற்பத்தித்திறன் அபிவிருத்திக்கான நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.

“நீதி ஏன் நமக்குத் தேவை”, “மாற்றத்திற்கான பரிந்துரைகள்”, “சட்ட உதவிகள்” “மனித உரிமை செயற்பாடுகள்”, “சட்ட ஆட்சி” “சுயாதீன ஆணைக்குழுக்களும் அதன் செயற்பாடுகளும்” ஆகிய விடயதானங்களில் வல்லுநர்கள் கருத்துரை வழங்கினர்.

இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.எஸ்.அஸீஸ்,இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.சாமித்தம்பி. மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதன்போது நீதிக்கான மாற்றத்திற்காகப் பரிந்துரைப்போம் என்பது தொடர்பில் அது தொடர்பான துண்டுப்பிரசுரத்தினை ஏந்தி சத்தியப்பிரமானம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.