மட்டு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சமூக சந்தைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

(லியோன்)

கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவன அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சமூக சந்தைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு  29.06.2016  மட்டக்களப்பு டச்பார் நாவலடியில் இடம்பெற்றது.

 சமூக சந்தைப்படுத்தல் திட்டத்தின் உள்ளூர் பொருளாதாரத்தையும் சமூகத்தையும்  மேம்படுத்தும் திட்டத்தில் கீழ் திறனுக்கு தொழில் வாய்ப்பு எனும்  திட்டத்தின் ஊடாக  இளைஞர் ,யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளை  பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பூஸ்ட் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் மட்டக்களப்பு சர்வோதயமும் இணைந்து  மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன .

இந்த திட்டத்தின் ஊடாக கிராம மட்டத்தில் உள்ள இளைஞர் ,யுவதிகள் , விதைவைகள் , விசேட தேவையுடையவர்கள் போன்ற முக்கிய நபர்களை  அழைத்து  அவர்களின் பொருளாதார நிலை மாற்றத்தையும் , பொருளாதார அபிவிருத்தியையும் மேம்படுத்தும் முகமாக கட்டிட நிர்மாணம் , சுற்றுலாத்துறை, தகவல் தொழில் நுட்பம் , வாகன தொழில் நுட்பம் போன்ற  தொழில் வாய்ப்புகளையும் , தொழில் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவையின் அனுசரணையில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இந்த செயல்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் ,யுவதிகள் மற்றும் நலிவடைந்த சமூகத்திற்கு தெளிவு படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு 29.06.2016  மாலை மட்டக்களப்பு நாவலடி சன் ரைஸ் விடுதி ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது .


இந்த செயலமர்வு  நிகழ்வில்  இலங்கை நாட்டுக்கான வதிவிட பிரதிநிதி எஸ்தர் மெசிண்டோஸ், கிழக்குமாகாண பொறுப்பாளர் ,யோகேஸ்வரன் ,பிராந்திய சிரேஷ்ட நிகழ்சி திட்ட உத்தியோகத்தர் ஜெயக்குமார் ,,மட்டக்களப்பு சர்வோதய இயக்குனர் கரீம் சமூகசந்தைப் படுத்தல் முகாமையாளர் ஜுடி தீபன் மற்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்