மாணவர்கள் தலைமைத்துவ பண்புகளை சிறந்தமுறையில் பயன்படுத்தவேண்டும் -மட்டு.வலய கல்வி பணிப்பாளர்

மாணவர்கள் மத்தியில் உள்ள தலைமைத்துவ பண்புகளை சிறந்தமுறையில் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்று பிற்பகல் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சென்றனியல் ஸ்டார் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவ தலைவர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு இன்று பிற்பகல் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் என மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சென்றனியல் ஸ்டார் லயன்ஸ் கழகத்தின் தலைவரும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளருமான லயன் க.ஞானரெத்தினத்தினால் மாணவ தலைவர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் வலய தலைவர் லயன் பி.சடாச்சரராஜா,முன்னாள் வலய தலைவர் லயன் பி.டி.ஏ.ஜெயக்குமார், சென்றனியல் ஸ்டார் லயன்ஸ் கழகத்தின் செயலாளர் லயன் என்.புஸ்பாகரன்,பொருளாளர் லயன் அன்பழகன் குரூஸ்,கழக நிதி ஆலோசகர் லயன் ரி.வசந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செயலமர்வினைத்தொடர்ந்து பயிற்சிகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.