மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கும் மத்திய கல்லூரி

இலங்கையின் முதல் பாடசாலை என்ற பெருமையினைப்பெற்றுக்கொண்ட பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2005 ஆண்டு உயர்தரப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பழைய மாணவர் சங்கம் ஊடாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.டி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அதிதியாக கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்.

இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர் சசி உட்பட பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இரத்ததான முகாம் மூன்றாவது ஆண்டாகவும் இன்று நடைபெற்றது விசேட அம்சமாகும்.

இந்த இரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.