மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வளவொன்றில் இருந்த இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குவில் பொலிஸ் காவலரனுக்கு அருகில் உள்ள வளவினுல் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்;ட நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதன்போது ரி 56 துப்பாக்கிகள் நான்கும் மகசின்கள் எட்டும் 210 ரி-56 துப்பாக்கிகளுக்கான ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப்பொலிஸ் மா அதிபர் டபிள்யு ஜெ.ஜாக்கொட ஆராய்ச்சி, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் இப்பகுதிக்கு இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.