கன்னன்குடாவில் கண்ணகி கலை இலக்கிய விழா

மட்டக்களப்பில் வருடா வருடம் நடைபெற்றுவரும் கண்ணகி கலை இலக்கிய விழாவின் ஆறாவது இலக்கிய விழா நிகழ்வு இம்முறை கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்மறைய தினம் மட்டக்களப்பு கல்லடி “வொஸ் ஒப் மீடியா” ஊடக கற்கைகள் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கண்ணகி கலை இலக்கிய கூடலின் தலைவர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பில் கண்ணகி கலை இலக்கிய விழா ஆரம்பிக்கப்பட்ட வரலாறு மற்றும் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் பண்பாட்டுபவணி நிகழ்வுகள் ஆய்வரங்கங்கள் கூத்து நிகழ்வுகள் சம்பந்தமாக ஊடகங்களுக்கு தெளிவு படுத்தப்பட்டதுடன்.

எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள 2016 ம் ஆண்டுக்கான கண்ணகி கலை இலக்கிய விழா நிகழ்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தனர்.

“திருமாமணி நங்கை வந்தாள்! எங்கள் தேசம் தழைத்திட வந்தாள் வந்தாள்” என்ற மகுட வாசகத்தின் படி மட்டக்களப்பில் கண்ணகி அம்மன் மீண்டும் நீதி கோரி நிற்கின்றால் என்பதையும் அவள் தேசம் தழைத்திட வந்தாள் என்று கூறப்பட்டுள்ள போதும் எம் தேசம் தழைத்துள்ளதா என்ற கேள்விகளுடன் எம் தேசம் தழைக்க வேண்டுமாக இருந்தால் கலை கலாசார பண்பாட்டு ரீதியாக என்ன விடயங்களை செய்யவேண்டும் என்பது குறித்தும் கண்ணகி கலை இலக்கிய கூடல் சிந்திக்கின்றது என்று கூறியிருந்தனர்.