மரணமடையும் ஏழை தமிழர்களின் சடலத்தை கொண்டுசேர்க்க அல்லல்படும் உறவினரகள் -மட்டக்களப்பானின் உள்ளக்குமுறல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும் வறுமை நிலைப்பட்டவர்களின் சடலங்களை தூர இடங்களுக்கு கொண்டுசெல்லும் வகையிலான நடவடிக்கைக்கு உதவும் வகையிலான அமைப்பு ஒன்றை உருவாக்குவதன் அவசியம் தொடர்பிலான பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும் தமிழர்களில் வறுமைப்பட்டவர்கள் சடலங்களை கொண்டுசெல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கிராமங்களிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக தமது அண்மைய வைத்தியசாலைகள் இருந்து மட்டக்களப்புக்குதான் நோயாளிகள் அனுப்பப்படுவார்கள்.எனவே இங்குதான் அதிகமான தமிழர் இறக்கநேரிடுவார்கள்.

பட்டிருப்பு பாலம் தாண்டியுள்ள படுவான்கரை கிராமங்களிலிருந்து களுவாஞ்சிகுடி கொண்டு வரப்படும் நோயாளிகள்,கறுத்தப்பாலம் தாண்டியுள்ள கிராமங்களிலிருந்து செங்கலடி வைத்தியசாலை கொண்டுவரப்படும் நோயாளரும்,பணிச்சேன்கேணிபாலம் தாண்டிய கிராமமிருந்து வாழச்சேனை வைத்தியசாலை கொண்டுவரப்படும் நோயாளர்கள் எல்லோரும் மட்டக்களப்புதான் போதனா வைத்தியசாலைக்குதான் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இப்படியான வறுமையான கிராமங்களிலிருந்து அனுப்படும் தமிழ்நோயாளர் இறக்கும் போது சடலத்தை மீண்டும் தமது பகுதியிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பணவசதியோ,வாகனவசதியோ செய்து கொடுப்பதற்கு எந்த பொதுநிறுவனமோ, ஆலயங்களோ,அபிவிருத்தி சங்கங்கங்களோ முன்வருவதில்லை.இதற்காக ஒருமரண நிதியம் உருவாக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முஸ்லிம் மக்கள் தமது இறந்த சடலங்களை கொண்டு சேர்ப்பதற்கு ஏறாவூர், ஓட்டமாவடி,காத்தான்குடி போன்ற பகுதி பள்ளிவாசல்களால் மரணநிதியம் எனும் பெயரில் உருவாக்கி தனியார் அம்பிலண்ஸ் வண்டி மூலம் சடலத்தை கொண்டு சேர்த்து பணவசதி செய்து இறந்த ஏழையை கௌரவித்து உரியமரியாதையுடன் அடக்கம் செய்கின்றனர்.

மரணமடைந்த எமது தமிழரின் சடலத்தை கொண்டு சேர்ப்பதற்கு உறவினர் தமது காணி,தங்க ஆபரணங்களை விற்பனை, ஈடு வைக்கின்றனர் .சிலர் அதிக வட்டிற்கு வாங்கி இறப்பு ஒருபக்கம் பணவசதி இல்லாத மறு பக்கம் அளவிடமுடியாத சோகத்துடன் அடக்கம் செய்கின்றனர்.
இவ் சடலத்தை கொண்டு சேர்ப்பதற்கு தனியார் வாகனம் வாடகைக்கு அமர்த்த இருபதனாயிரம் மேல் தேவைப்படுவதுடன் இந்த செலவு ஒவ்வொரு ஊரை பொறுத்து வேறுபடும்.

இனியாவது எமது மட்டக்களப்பு ஏழைத்தமிழரின் சடலத்தை கொண்டு சேர்ப்பதற்கு ஏதாவது தொண்டு நிறுவனமோ, ஆலயங்களோ முன்வந்து ஒருமரணநிதியம் உருவாக்கி. அதன் மூலம் சேவை செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.