64அடி ஆஞ்சநேயர் சிலையுடன் கலாசார மண்டபம் -பிள்ளையாரடியில் அடிக்கல் நடும் நிகழ்வு நாளை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடிப்பகுதியில் 63 அடிகொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையும் கலாசார மண்டபமும் நிர்மாணிக்கும் பணிகள் நாளை சனிக்கிழமை (11) ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆஞ்சநேய நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை 6.00மணி தொடக்கம் 8.00மணி வரையுள்ளதான சுபவேளையில்பிள்ளையாரடி வளைவில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு நகரில் இந்துக்கலாசார மண்டபம் இல்லாத நீண்ட நாள் குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் இ.சண்முகராஜா தெரிவித்தார்.

63 அடிகள் உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படவுள்ளதுடன் இந்துக்கலாசார மண்டம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா கலந்துகொள்ளவுள்ளதுடன் அதிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்துமக்களின் நீண்டகால குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த இந்துக்கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அனைத்து பெருமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.