இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக கலாசார சித்திரப் போட்டிகள் (VIDEO & PHOTOS)

 (லியோன்)

2016  வாழ்வின் எழுச்சி ,சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக கலாசார மற்றும் இலக்கிய  சித்திரப் போட்டிகள் இன்று மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி கிளையில்  இடம்பெற்றது .

 வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை ,சமுர்த்தி வங்கி பயனாளிகளின் குடும்ப மாணவர்களில் தெரிவு செய்யப்பட  சிறுவர்களுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான வாழ்வின் எழுச்சி ,சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக கலாசார மற்றும் இலக்கிய சித்திரப் போட்டிகள் இருதயபுரம் வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளர் திருமதி . இருதயதாசன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சமூகத்திற்கு எடுத்துச் செல்லகூடிய ஆற்றல் மிக்க சிறுவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் சிறுவர்  கழகத்தில் உள்ள  சிறுவர்களில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களில் உள்ள பல்வேறு திறமைகள் கொண்ட  சிறுவர்களது இலக்கிய மற்றும் கலைத்திறமைகளை மேலும் ஊக்குவிக்கும் முகமாக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன .

இன்று நடத்தப்படுகின்ற சித்திரப் போட்டியில் சிறுவர்கள் அன்றாடம் தமது    குடும்ப சூழலிலும் , சமூக சூழலிலும் எதிர் நோக்குகின்ற சமூக பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விளைவிக்க கூடியதை  விளைவுகள் சித்தரிக்கும் வகையில் இந்த ஓவியங்களாக இடம்பெறவுள்ளது .

இந்த போட்டியில் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி பயனாளிகளின் பாடசாலை செல்லும் மாணவர்கள் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டார்கள் .


இந்த போட்டியில் மூலம்  தெரிவு செய்யப்படும் சிறுவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்படும் போட்டிகளில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது .