மட்டு- கல்லடிமுகத்துவாரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் திருக்கதவு திறத்தல் வைபவம் (வீடியோ & போடோஸ்)

(லியோன்)

மட்டக்களப்பு
 கல்லடி முகத்துவாரம்  ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய வருடாந்த அலங்கார  சடங்கு உற்சவத்தின்   திருக்கதவு  திறத்தல்  வைபவம் 13.06.2016  இன்று காலை மிக  பக்திபூர்வமாக இடம்பெற்றது


மட்டு நகரில் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு  கல்லடி முகத்துவாரம்  ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின்   திருக்கதவு  திறத்தல் வைபவம் ஆலய பிரதம பூசகர் க.சித்திரவேல்  தலைமையில் 13.06.2016 இன்று காலை இடம்பெற்றது .

ஆலய உற்சவத்தின் தீர்த்த உற்சவம் எதிர் வரும்  20.06.2016  திங்கள்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ,தீர்த்த உற்சவம் இடம்பெற்று திருக்கும்பம் சொரிதலுடன் பெருவிழா நிறைவுபெறும் .

ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் இரவு  அபிஷேக அலங்கார பூசைகள்  இடம்பெறும் .

ஆலய உற்சவத்தின் 06ஆம்  நாள் சடங்கு 18.06.2016 சனிக்கிழமை  இரவு தீ மூட்டும் வைபவமும் 19.06.2016  அதிகாலை நான்கு மணிக்கு தீ மிதிப்பு வைபவமும் இடம்பெறும்

 19.06 .2016  ஞாயிற்றுகிழமை 07ஆம்  நாள் சடங்கு நண்பகல் கண்ணிமாருக்குப் பள்ளயப் பூசையும் இரவு விநாயகப் பானை எழுந்தருளப்பன்னுதல் இடம்பெறும்.   

20.06.2016  திங்கள்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ,தீர்த்த உற்சவம் இடம்பெற்று திருக்கும்பம் சொரிதலுடன் கல்லடி முகத்துவாரம்  ஸ்ரீ முத்துமாரியம்மன்    ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே  நிறைவுபெறும் .