“பாடு மீன்களின் சமர் ” மென்பந்து கிரிகட் போட்டி சமரில் வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலை இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.(VIDEO & PHOTOS)

(லியோன்)

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் சிசிலியா பெண்கள் பாடசாலைக்கும் ,   வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலைக்கும் இடையிலான பாடு மீன்களின் சமர்  மென்பந்து கிரிகட் போட்டி  சமரில்   வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலை வெற்றி பெற்று இந்த  ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான  மட்டக்களப்பு சிசிலியா பெண்கள்   கல்லூரிக்கும் , மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள்   பாடசாலைக்கும்  இடையிலான  7வது மாபெரும் மென்பந்து கிரிக்கெட்  சமர்   இன்று  மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில்  இடம்பெற்றது .கோலாகலமாக காலை ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது இதனை    தொடர்ந்து  சிசிலியா பெண்கள்   கல்லூரிக்கும் , வின்சென்ட் உயர்தர பெண்கள்   பாடசாலைக்கும்   இடையிலான  20 ஓவர் கொண்ட கிரிக்கெட்  சமர்  ஆரம்பமானது .  

முதலில் நாணய சுழற்சி இடம்பெற்றது . இந்த நாணய சுழற்சியில் வின்சென்ட்  உயர்தர பெண்கள் பாடசாலை  வெற்றி பெற்றது .

நாணய சுழற்சியில்  வெற்றி பெற்ற   வின்சென்ட்  உயர்தர பெண்கள் பாடசாலை   முதலில்  களத்தடுப்பில் ஈடுபட்டது . .
  
முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு சிசிலியா தேசிய பெண்கள் பாடசாலை 20  ஓவர்களில் இரண்டு  விக்கெட்டுக்களையும் இழந்து 130  ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலை 20  ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை  இழந்து  130 ஓட்டங்களை பெற்று வெற்றி  தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது .

இதனை தொடர்ந்து நடுவர்களுக்கு தீர்ப்புக்கு அமைய சுப்பர் ஓவர் முறையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர்கள் வீதம் வழங்கப்பட்டது

நடுவர்களினால் வழங்கப்பட்ட சுப்பர் ஓவர்களில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலை ஓவர் முடிவில் ஒரு விக்கட் இழப்புக்கு 12 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா  பெண்கள் தேசிய பாடசாலை ஓவர் முடிவில் நான்கு ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது .


இதன் அடிப்படையில் சுப்பர் ஓவர் மூலம் எட்டு ஓட்டங்களால் வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலை   வெற்றி பெற்று   இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்ப்பட்டது.