மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்ட சிறுகதை நூல் வெளியீட்டு விழா ( VIDEO & PHOTOS )

(லியோன் )

மட்டக்களப்பு தமிழ்ச்  சங்கத்தினால் நடத்தப்பட்ட திருமதி . சுந்திரமதி வேதநாயகத்தின்  சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா  24.05.2016 செவ்வாய்க்கிழமை   மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது


மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமதி . சுந்திரமதி வேதநாயகத்தின் , நல்லநட்பு , மீனுக்குட்டி , கோழியம்மா ஆகிய மூன்று சிறுவர் சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவர் சட்டத்தரணி  எம் . கணேசராஜா தலைமையில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் 24.05.2016  செவ்வாய்க்கிழமை  மாலை இடம்பெற்றது .

இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்ச் சங்க தலைவர் தெரிவிக்கையில்   மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம்  மாதம் ஒரு நிகழ்வையாவது நடாத்த வேண்டும் என்ற அடிப்படையிலே கடந்த  மாதங்களில்  சில நூல் வெளியீட்டு நிகழ்வுகளை தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது .

அதன் தொடர்ச்சியாக தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திருமதி. சுந்திரமதி வேதநாயகத்தின் மூன்று நூல்களை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தினால் வெளியிடப்படுகின்றன .

கொழும்பு தமிழ் சங்கமானது வாரம் ஒரு நிகழ்வாக  தமிழ் ஆய்வுகள் ,தமிழ் நூல்கள் வெளியீடுகள் போன்ற பல நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திவருகின்ற வேளையில் மட்டக்களப்பு தமிழ் சங்கமும் தன்னாலான தமிழ் சார் பணிகளை செய்துகொண்டிருக்கின்றது .

குறிப்பாக தமிழ் சங்கத்துக்கு உள்ளேயே எழுத்தாளர்களும் , புலமை சார் பெருமக்களும் இருகின்ற காரணத்தினால் எங்களால் இயன்ற அளவு இவ்வாறான நிகழ்வுகளை நடத்தகூடியதாக உள்ளது .

இந்த மூன்று நூல்களையும் எழுதி வெளியிடுகின்ற எழுத்தாளர் திருமதி. சுந்திரமதி வேதநாயகம் தமிழின்பால் , கலை கலாசாரத்தின்பால்  கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணமாக  அவரால் எழுதப்பட்டு நூல்கள் , நடத்தப்பட்ட நிகழ்வுகள்  என பல நிகழ்த்தப்பட்டுள்ளன .

இவரினால் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான இந்த மூன்று  சிறிய நூல்கள் சிறியனவாக இருந்த போதிலும் அது சிறுவர்களுக்கு பெரிய நூல்களாக அமைந்துள்ளது .

இந்த மூன்று நூல்களையும் எழுதியதோடு இந்த நிகழ்வுகளையும் ஒழுங்கமைத்து தமிழ் சங்கத்தின் ஊடாக இதனை வெளியிட்டு வைக்கின்றார்   .

இது போன்று பல பணிகள் இவரினால் தொடர வேண்டும் என்று மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவர் கேட்டுக்கொண்டதோடு , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார் .  


இதனை தொடர்ந்து சுந்திரமதி வேதநாயகத்தின் , நல்லநட்பு , மீனுக்குட்டி , கோழியம்மா ஆகிய மூன்று சிறுவர் சிறுகதை நூல்களின் வெளியீட்டு நிகழ்வும், நினைவு சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின்  காப்பாளர்களான  பேராசிரியர்  எஸ் . மௌனகுரு , பேராசிரியர் . எம் . செல்வராஜா , கலாபூசணம் எஸ் . எதிர்மன்னசிங்கம் ,  தொல்லியல் ஆய்வாளர்  செல்வி கே . தங்கேஸ்வரி ,வி. ஈ .சி .எஸ் .கல்லூரி பணிப்பாளர்  கே .முருககுமார் ,  மட்டக்களப்பு தமிழ்ச் சங்க துணைத்தலைவரும் ,மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினருமான  எம் .செல்வராஜா மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்  கலாசார உத்தியோகத்தர்கள் , அறநெறி பாடசாலை மாணவர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .