சந்திவெளி-இலுப்படிச்சேனை படகு சேவையை புனரமைக்க பிள்ளையானால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம்

மட்டக்களப்புமாவட்டத்தின் சந்திவெளி இலுப்படிச்சேனை படகு போக்குவரத்தை சீர்படுத்தி இலவசமாக வழங்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மாகாணசபைஅ மர்வு கூடியபோது இது தொடர்பான பிரேரணை அவரால் கொண்டுவரப்பட்டது.

இந்த பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,இந்த படகுப்போக்குவரத்துசேவை இதுவரை சீர்செய்யப்படாதது காரணமாக படுவான்கரை பிரதேசமக்கள் பெரும் சிரமங்களைஎதிர்கொண்டுவந்தனர்.

படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் இப்படகுச்சேவை சீர்செய்யப்படாதது காரணமாக வெள்ளப்பெருக்குகாலங்களில் பலஉயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஆகையால் இப்பாதையினூடான படகு போக்குவரத்தினைதிருத்தியமைத்து இலவசபடகுப் போக்குவரத்துசேவையினை வழங்கமுன்வரவேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

இப்பிரேரணைசபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் குறித்த படகுசேவையினை சீர்செய்து வழங்குவதாகவும் அடுத்த ஆண்டு முதல் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையினூடாக இலவச சேவையை நடத்துவதற் குநடவடிக்கைஎடுப்பதாகவும் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்கள் உறுதியளித்தார்.