ஜூன் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரை இடம்பெறவுள்ள விவசாய கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு இடம்பெற்றது

(லியோன்)


எதிர் வரும் ஜூன் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரை மட்டக்களப்பு  கல்லடி பாலத்திற்கு அருகாமையில் மூன்று நாள்  மாபெரும் விவசாய கண்காட்சியும்  மற்றும் வியாபார சந்தையும்  இடம்பெறவுள்ளது .

 மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு மாநகர சபையுடன் யுனப்ஸ், ஜனதாக்சன ஆகிய நிறுவனங்களும் இணைந்து ஜூன் மாதம் முதலாம் ,இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாபெரும் விவசாய கண்காட்சியையும்   மற்றும் வியாபார சந்தையினையும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது   .

இந்த விவசாய கண்காட்சி மற்றும் வியாபார சந்தை தொடர்பாக  மக்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக மக்களுக்கு அறிவிக்கும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு யுனப்ஸ்  நிறுவன தின்மக்களிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்ட அதிகாரி எஸ் .சிவக்குமார் தலைமையில் மட்டக்களப்பு ஜனதாக்சன  நிறுவன அலுவலகத்தில் 26.05.2016  வியாழக்கிழமை இடம்பெற்றது .

இந்த ஊடக சந்திப்பு நிகழ்வில்  மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் , கிழக்குமாகாண விவசாயத்திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்)  ஆர் . கோகுலதாசன் ,  கரடியனாறு விதை மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தில் நிலைய பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர் . சிவநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்
  
இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த விவசாய கண்காட்சி மற்றும் வியாபார சந்தை தொடர்பாக விளக்கவுரையினை மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர் என் தனஞ்சயன்  ஊடகங்களுக்கு தெரிவித்தார் .


மட்டக்களப்பு மாநகர சபையுடன் ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்கள் கழிவுத் முகாமைத்துவம் தொடர்பாக செயல்பட்டு வருகின்றது .

அவற்றை குறைக்கும் நோக்கோடு   கழிவுகளில் இருந்து  உற்பத்தியாகின்ற உரம் , இயற்கை வளங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தி இதன் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்  இந்த வியசாய கண்காட்சி நோக்கமாகும் .

இந்த கண்காட்சி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரை காலை 10.00 மணி முதல்  மாலை  07.00 மணி வரை மட்டக்களப்பு மாநகர சபைக்கு உரிய இடமான  கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது .

இதில் முக்கிய விடயமா நான்கு விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது . முதலாவதாக அதிகளவு கழிவுகள் உருவாவதை தடுக்கும் நோக்கோடு சில கண்காட்சி கூடங்களும் ,இரண்டாவதாக இயற்கை உரம் சம்பந்தமான காட்சி கூடங்கள் , மூன்றாவதாக இயற்கை மரக்கறி வகைகள் , பழவகைகள் தொடர்பான காட்சி கூடங்கள் , நான்காவதாக புதிய தொழில் நுட்பங்களை கொண்டு குறைந்த மூல வளங்களை கொண்டு அதிக உற்பத்திகளை செய்கின்ற புதிய தொழில் நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அது தொடர்பான காட்சி கூடங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர்   ஊடகங்களுக்கு தெரிவித்தார் .


இதன் போது   சூழல் மாசடைதல் சம்பந்தமாக சூழல் பாதுகாப்பு தினத்தில் இந்த விவசாய கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . 

அது தொடர்பான விபரங்களை  கிழக்குமாகாண விவசாயத்திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்)  ஆர்
கோகுலதாசன்  வழங்கினார் .



இந்த சூழல் மாசடைத்தலில் முக்கிய ஒரு செயல்பாடாக  விவசாய நடவடிக்கைகள் அமைந்துள்ளது .அந்த வகையில் விவசாய திணைக்களமும் இந்த கண்காட்சில் பங்கு வைக்கின்றது . இயற்கை விவசாயம் ரசாயனமற்ற முறையில் பயிர்செய்கைகளை மேற்கொண்டு ஆரோக்கியமான உணவு உற்பத்திகளை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான  காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது . அடுத்த விடயமாக நகர் புறங்களில் எவ்வாறு பயிர்செய்கையினை மேற்கொள்ளாம் என்பது தொடர்பான நகர் மாதிரி தோட்டம் தொடர்பான காட்சி கூடம் மற்றும் பயிர்செய்கை நடவடிக்கையின் போது வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்த காட்சி கூடத்தில் இடம்பெறவுள்ளதாக கிழக்குமாகாண விவசாயத்திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்)  ஆர் . கோகுலதாசன் தெரிவித்தார் .


இதே போன்று கரடியனாறு விதை நடுகை பொருட்கள் மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரிவும் இந்த கண்காட்சி நிகழ்வில் கூடத்தை அமைக்கவுள்ளது .

அது தொடர்பான விபரங்களை கரடியனாறு விதை மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தில் நிலைய பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர் . சிவநேசன்  வழங்கினார் .

இந்த கண்காட்சியின் நோக்கமானது நஞ்சற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்து அதன் மூலம் மக்களின் சுகாதார வாழ்வை மேம்படுத்தும் திட்டமாகும் .

இந்த  திட்டத்தில் சேதனை பசளைகளை குறைத்து எதிர்வரும் காலங்களில் இயற்கையான   உரங்களை பாவித்தி விவசாய  உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கண்காட்சியின் பிரதான நோக்கமாக இருக்கின்றது .

இந்த கண்காட்சி கூட்டத்தி விவசாய உற்பத்திகளுக்கான விதைகள் நடுகை பொருட்களை விற்பனை செய்யும் பிரதான கூடமாக  இது அமையும் . அத்தோடு விவசாய செய்கை  தொடர்பான புத்தகங்களும் இங்கு பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் .

இந்த புத்தகங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் தெரிவித்துக்கொண்டார்