ஸ்ரீ குமாரத்தன் ஆலயத்தின் மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும்

(லியோ)

ஜெயந்திபுரம் அருள்மிகு  ஸ்ரீ  குமாரத்தன்  ஆலயத்தின் கும்பாபிசேக  தின பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும்  07.05.2016  இடம்பெற்றது .


கிழக்கிலங்கையில் சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு  ஸ்ரீ  குமாரத்தன் ஆலய பரிவார மூர்த்தி நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரர்  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக   தின பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் 108 சங்காபிசேகமும் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் 07.05.2016  சனிக்கிழமை    சிறப்பாக நடைபெற்றது.

 மட்டக்களப்பு  மாமாங்கம்   அருள்மிகு  ஆதி விநாயகர்  ஆலயத்தில் இருந்து மாபெரும் பால் குட பவனி  ஆரம்பமானது .

பால்குட பவனியானது ஆலயத்தினை  வந்தடைந்ததும்  அடியார்கள் கொண்டுவந்த  பால் மூலமூர்த்தியாகிய   நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரருக்கு   அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட யாக பூஜையும் 108 சங்காபிஷேக விசேட பூஜைகளும்  மட்டக்களப்பு நாவக்குடா கங்காணி பிள்ளையார் ஆலய பிரதம குரு கிரியாஜோதி சிவஸ்ரீ உ . ஜெயகிருஷ்ணா குருக்கள்   தலைமையில்  நடாத்தப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய   நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த உற்சவ பெருவிழாவில்  பெருமளவான அடியார்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்