நிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

(லியோ)

விழுது - ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் நிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு  இன்று  21ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிறிஜ் வியூ ஹோட்டலில் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 04.00  மணிவரை  நடைபெற்றது .

 மட்டக்களப்பு கல்லடி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஹ. இந்துமதியின்  தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ,முஸ்லிம்   ஆண், பெண் ஊடகவியலாளர்கள் மற்றும்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இடம்பெற்ற செயலமர்வில்  வளவாளராக  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி . அம்பிகா சற்குணநாதன் கலந்துகொண்டார்

இடம்பெற்ற செயலமர்வில்  நிலை மாறு கால நீதி தொடர்பான தெளிவூட்டல்கள் சமூக மட்டத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இன்றைய கால கட்டத்தில் முக்கியமாக இலங்கையைப் பொறுத்தவரை நிலைமாறுகால நீதியினை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தில் தேவை . இதற்கான ஆதரவுகளையும் ஊடகவியலாளர்கள் வழங்கியாக வேண்டிய நிலையில் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .

இந்த நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டில் நம்பிக்கையினை மீள கட்டியெழுப்பல்,  உண்மையினை வெளிப்படுத்தல்,   குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல்,  நிலையான சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல் என்பவை முக்கிய பகுதிகளாக வளவாளரினால் விபரிக்கப்பட்டது .

நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை,  நிறுவன ரீதியிலான சீர் திருத்தம்,  குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியினைக் கண்டறியும் உரிமை,  இழப்பீடு வழங்குதல்  என்பது தொடர்பாகவும் , பிராந்தியங்களிலுள்ள ஊடகவியாலாளர்களும் பங்களிப்பு வழங்க வேண்டிய வகையில் இந்த செயலமர்வாக  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .