News Update :
Home » » மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் படுகாயம்

Penulis : kirishnakumar on Saturday, May 21, 2016 | 10:30 AM

மட்டக்களப்பு நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கோவிந்த வீதியின் சிறைச்சாலை சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேபோன்று இருதயபுரம் -மாமாங்கம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துகளின்போது படுகாயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.






Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger