கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வு

(லியோ)


கல்லடி  உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை திறப்பு விழா  நிகழ்வு 03.03.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் பாடசாலைக்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு  03.03.2016  ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திருமதி . ஹரிதாஸ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ண  மிஷன் வணக்கத்துக்குரிய  ஸ்ரீமத்சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  சரஸ்வதி சிலையினை திறந்து வைத்து  ஆசியுரை வழங்கினார் .

இந்நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  எஸ் . யோகேஸ்வரன் மற்றும் அதிதிகளாக  அவுஸ்ரேலிய  தமிழ் பொறியியலாளர் சங்கம் என் .மோகனதாஸ் , மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர்  எ . சுகுமாரன், உதவி கல்விப் பணிப்பாளர் (உடல்கல்வி ) வி .லவக்குமார்  உட்பட கல்லடி நொச்சிமுனை ஆலய பரிபாலன சபையினர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

பாடசாலை வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலையானது பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு உதவியுடனும் , பாடசாலை நலன்விரும்பிகளின் பங்களிப்புடன் இச்சிலை பாடசாலை வளாகத்தில்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது .


அத்துடன் அவுஸ்ரேலிய  தமிழ் பொறியியலாளர்கள் சங்கத்தினால் இப்பாடசாலைக்கு   போட்டோ பிரதி இயந்திரமும்  வழங்கி வைக்கப்பட்டது .