ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்

(லியோ)


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  தர்மலிங்கம் சித்தார்த்தன்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை
03.04.2016 ஞாயிற்றுக்கிழமை  மேற்கொண்டுள்ளார் .


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  தர்மலிங்கம் சித்தார்த்தருடனான    மக்கள்சந்திப்பு     மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வியாலேந்திரனின் அலுவலகத்தில் இடம்பெற்றது  .

மக்கள் சந்திப்பினை  தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்   தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வியாலேந்திரனின் ஆகியோருக்கிடையிலான ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வியாலேந்திரனின் அலுவலகத்தில் இடம்பெற்றது  .

 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வியாலேந்திரனின் ஆகியோரினால் பதில்கள் வழங்கப்பட்டது .

இந்த சந்திப்பின் போது இங்கு கருத்து தெரிவிக்கையில் ஜனாநாயக கட்சியுடைய  கிளைகள் அதாவது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள கட்சியின்  கிளை உறுப்பினர்களை அனைவரையும் அழைத்து  இந்த மாவட்டங்களுக்கான அபிவிருத்தி வேலைகள் ,இந்த மாவட்டங்களை எவ்வாறு பலப்படுத்தலாம் அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கு எந்த அளவிலே தமது கட்சியினுடைய செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றது .

 கட்சியின்  கிளை உறுப்பினர்களின் சந்திப்பின் போது தெளிவு படுத்தப்பட்டதோடு, தமது கட்சியுடன் நீண்ட காலமாக செயல்பாடு அற்று இருந்த உறுப்பினர்களையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி , மீண்டும் இவர்களை செயல்பட வைப்பதோடு இவர்களை அரசியல் ரீதியாக முழுமையாக ஒரு பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கி அந்த அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலத்தை கொடுப்பதன் மூலம் தற்போதைய அரசியல் தீர்வு சம்பந்தமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக தீவிரமான நடவடிக்கைகள்  பாராளுமன்றத்தில் எடுக்கப்படுகின்ற வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றுபற்ற குரலிலே எங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தாம் எங்களுடைய பயணத்திலே சரியான பாதையிலே செல்லமுடியும் என்று நம்புகின்றோம் .

அதன் ரீதியிலே எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற இந்த கட்சியின் அமைப்புக்கள் அதாவது தமது கட்சியின் தமிழ் மக்களின் விடுதலை கழகத்தின் அமைப்புக்களை அழைத்து அவர்கள் மூலம் ஒரு சரியான நிலைப்பாட்டை எடுக்கப்பட்டு , தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செல்லக்கூடிய ஞாயமான நிலைப்பாட்டை எடுத்து சரியான கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்ற அடிப்படியிலே தான்  இந்த விசயங்களை மேற்கொண்டு உறுப்பினர்களை சந்தித்து வருகின்றோம் .

அந்த அடிப்படையிலே தான் மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய பகுதிகளில் இருக்க கூடிய உறுப்பினர்களை அழைத்து இந்த சந்திப்பை நிகழ்த்தி இருக்கின்றோம் . தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய ஒரு முக்கிய கட்சியாக திகழ்கின்றது .

பாராளுமன்றத்திலே இன்று ஒரு அரசியல் அமைப்பு மாற்றம் சம்பந்தமாக அரசியல் அமைப்பு சபைகள் உருவாக்கப்பட்டு ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற போது நாங்கள் பலமாக எங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து , அந்த கோரிக்கைளை வென்று எடுப்பதற்காக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக மிக அக்கறையாக செயல்பட்டு கொண்டிருகின்றோம் .

அண்ணன் சம்பந்தன் நம்புகின்றார்,  பலதடவையும் சொல்லியும் இருக்கின்றார் , கடந்த காலத்தை பார்த்தீர்கள் என்றால் ஐக்கிய தேசிய கட்சியும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றை ஒன்று பகைத்துக்கொண்டு , ஒரு கட்சி ஒன்றை செய்யும் போது மற்ற கட்சி எதிர்ப்பது போல எதிர்த்து எந்தவிதமான ஒரு தீர்வையும் பெறவிடாமல் பார்த்துகொண்டு இருந்தார்கள் .

 இன்று இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ஒன்றாக அரசை அமைத்திருக்கின்ற போது இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம் என்று உலக நாடுகளும் , மக்களும் நம்புகின்றார்கள் .ஆகவே எங்களுடைய  முயற்சியை எடுக்க வேண்டும் .

இது எப்படி போகும் எப்படியான தீர்வு வரும் என்று எங்களால் கூறமுடியாது . தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் வடகிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி அமைப்பையே அடிப்படையாக நங்கள் கோரி இருக்கின்றோம் . இதற்கு  கடுமையான எதிர்ப்புகள் இப்போது தென்னிலங்கையிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இந்த அரசியல் அமைப்பும், மாற்றமும் கடந்த காலங்கள் போல அதாவது 72, 78  ஆண்டுகளில் இடம்பெற்ற அரசியல் அமைப்பு போல தமிழ் மக்களின் பங்களிப்பு ஏதும் அற்று உருவாக போகின்றதா  அல்லது தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஒரு ஞாயமான தீர்வை அடைய போகிறோமா என்பதை பொறுத்திருந்து தான் நாங்கள் பார்க்க வேண்டும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார் .