களுவாஞ்சிகுடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன பஸ்தரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த பஸ்தரிப்பிடம் இல்லாத குறை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருhதா அபிவிருத்தப் பிரதியமைச்சின் சுமார் ஒரு கோடியே 50இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன பஸ்தரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மையப்பகுதியாகவுள்ள களுவாஞ்சிகுடியில் பல்வேறு இடங்களிலும் இருந்து பஸ்கள் வந்து செல்லும் நிலையில் இங்கு பஸ்தரிப்பிடம் இல்லாமல் பிரயாணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் கிராமிய பொருhதா அபிவிருத்தப் பிரதியமைச்சர் அமீர்அலியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி கிராம தலைவர் கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கே.சுகுணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பஸ்தரிப்பிடம் மற்றும் அதனுள் உள்ள சேவை நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள பஸ்தரப்பிடத்திற்கான நிதியை ஒதுக்கீடுசெய்த பிரதியமைச்சர் களுவாஞ்சிகுடி மக்களால் கௌரவிக்கப்பட்டனர்.