நம்முடைய கலாசார உறவு முறைகளை மறந்து உறவுகளுக்கு கொடுத்த மதிப்பை இழந்து வருகின்றோம்

(லியோ)

நம்முடைய கலாசார உறவு முறைகளை மறந்து  உறவுகளுக்கு கொடுத்த மதிப்பை இழந்து  வருகின்றோம் - ஊறணி கிராமத்தல் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  தலைமயில் இடம்பெற்ற சித்திரை 
புதுவருட கலாசார நிகழ்வில் பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார் .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார மற்றும் கலை அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு  தொடர்பாக எதிர்கால சந்ததியினருக்கு தெளிவூட்டும் நிகழ்வு  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறணி கிராமத்தல் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமயில் இன்று இடம்பெற்றது.  

தமிழ் பாரம்பரியத்தின்  பழைமையை  நினைவு படுத்தும் வகையில்   ஊறணி அரியரெத்தினத்தின் பழைமைவாய்ந்த அவரது இல்லத்தில் இடம்பெற்ற  பாரம்பரிய கலாசார நிகழ்வில் பாரம்பரிய முறைகளின் ஒன்றான பெரியோர்களினால்  குடும்பத்தாருக்கு  மறுத்து நீர் வைத்து நீராடியதன் பின் புத்தாடை அணிந்து  பெரியோர்களை வணங்கி கைவிசேடம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது .

அதன் பின் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டதுடன், கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது .

இந்த புத்தாண்டு சிறப்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் இன்றைய காலகட்டத்தில் நாங்கள் மிக வேகமாக ஓடிகொண்டிருகின்றோம் .

எம்முடைய கலை கலாசாரங்களை நாங்கள் மறந்து இளம் சந்ததியினருக்கு சித்திரை புத்தாண்டு என்றால் என்ன அதிலே நடைபெறுகின்ற சம்பவங்கள் என்ன என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .
இந்த நிலையை இவ்வாறு விட்டுவிட கூடாது என்பதற்காகவும் , பாரம்பரிய தமிழ் சித்திரை புதுவருடம் என்பதனுடைய அடிப்படை அம்சங்கள் என்ன , அதனை எவ்வாறு ஊரெல்லாம் கூடி மகிழ்ந்திருக்கின்றது என்பதனை உணர்த்துகின்ற வகையிலே இந்த தமிழ் சித்திரை வருட புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றது .  


நம்முடைய கலாசார உறவு முறைகளை மறந்து  உறவுகளுக்கு கொடுத்த மதிப்பு இழந்து  வருகின்றோம் . இதன் காரணமாக தான் பல இடங்களில் பல பிரச்சினைகளாக சிறுவர் துஸ்பிரயோகம் , பெண்களுக்கான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றது .

இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது உறவு  முறைகளுக்கு  கொடுக்கின்ற மதிப்பை குறைத்தது காண்பது தான் . எங்களுடைய பாரம்பரிய கிராம கலை கலாசார உறவு முறைகளை மறந்து தனித்தனி மனிதர்களாக வாழத்தொடங்கி விட்டோம் , அதனை நாங்கள் மாற்றி நல்ல குடும்பமாக , அன்பான குடும்பமாக , நல்லகிராமமாக , அன்பான சமுதாயமாக மாறி எங்களுடைய கலை கலாசார பண்பாட்டு விளும்பியங்களை  எதிர்கால சந்ததியினரு அறியப்படுத்த வேண்டும் என்ற வகையில் இந்த கலாசார நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவித்தார் .



இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ,செயலாளர் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , ,கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் ,சமுதாய சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  ,சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .